தமிழ்நாடு

அசத்தி வரும் தமிழக அரசு: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,  தடுப்பூசி, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறினார்.

மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டினார்.