தமிழ்நாடு

“10 லட்சம் நிதியுதவி.. ஒரு நபர் விசாரணை ஆணையம்” - விஜய் பரப்புரையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

பலி எண்ணிக்கை அதிகமான நிலையில் இன்று இரவே தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்..

Mahalakshmi Somasundaram

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி  ஆறு குழந்தைகள், 16 பெண்களை உட்பட 33 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டத்தில் மயங்கி விழுந்து 52  பேர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் காரணமாக  முதலமைச்சர் நாளை காலை கரூருக்கு செல்ல இருந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகமான நிலையில் இன்று இரவே தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார். தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, சுப்ரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து மருத்துவ சிகிச்சைகளுக்கு போதுமான வசதிகளை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.