தமிழ்நாடு

மொழிப்போரில் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு...மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் :

தமிழ் மொழி காக்க தங்கள் இன்னுயிரை நீத்த மொழிக்காவலர்களுக்கு  வீர வணக்கம் செலுத்தும் நாளான, மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொழிப்போரில் இன்னுயிரை நீத்த தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.