தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் முதலமைச்சா்...!

Tamil Selvi Selvakumar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளாா்.

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறாா். அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர், தில்லை நாயகம் 2-வது தெருவில் உள்ள எவர்வின் பள்ளி மைதானத்தில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளாா். 

தொடர்ந்து, திருவிக நகர் பேருந்து நிலையத்தை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலமாக மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். பின்னா் தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஆனந்தமன் மாநகராட்சி பூங்கா மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

அதனையடுத்து பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ராஜா தோட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக புதிதாக 9 அடுக்குமாடிகள் கொண்ட 162 குடியிருப்புகள் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டுகிறார்.

அதேபோல், பூம்புகார் நகர் 4-வது தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவின் வெளியே கொளத்தூர் தொகுதியில் 70 பூங்காக்களில் நடைபாதை மேம்படுத்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.