தமிழ்நாடு

சொந்த தொகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர்...அதிகாரிகளுக்கு வலியுறுத்தியது என்ன?

Tamil Selvi Selvakumar

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மழைக்கு பாதித்த இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர்:

கொளத்தூர் தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 ஆயிரம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, 60 பேருக்கு கொசுவலைகளை ஸ்டாலின் வழங்கினார். பின்னர், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் பாதித்த இடங்களை அவர் ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு:

அப்போது, சீரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், மழைநீரை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டீபன் மற்றும் பல்லவன் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஆய்வு நடத்திய போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.