தமிழ்நாடு

ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம்...திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

Tamil Selvi Selvakumar

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 120 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மயிலாடுதுறை தரங்கம்பாடியில் மீனவர்கள் பயன்பெறும் வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு 10.6 ஹேக்டேர் பரப்பளவில் 120 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 

இதன் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம், தரங்கம்பாடி, சின்னமேடு, சின்னங்குடி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர்.