தமிழ்நாடு

தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

தகவல் தொழில்நுட்ப தேவைக்கு இன்றியமையாததாக உள்ள கட்டமைப்பு அறிவியல் போன்றவற்றை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில் நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக பிரிட்ஜ் 23ன் 50 வது கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர், ஐசிடி அகாடமி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய கருத்தரங்கள் நிகழ்த்துவது பாராட்டுக்குரியது என்றும், ஐபிஎல் வுட் கட்டமைப்பு சேவைகளை வழங்குவது போன்ற பல்வேறு விஷயங்களை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

இதன் மூலம் தமிழ்நாடு மக்கள் காகிதம் இல்லா டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்த முதலமைச்சர், இளைஞர்கள் தங்களின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப துறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் தலைமையில், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு ஐ டி துறையில் பணி, போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.