தமிழ்நாடு

கமல்ஹாசன் பிறந்தநாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Tamil Selvi Selvakumar

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.