தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...

தமிழக பள்ளிக்கல்வித்துறை  சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Malaimurasu Seithigal TV

நபார்டு திட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நலத்திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக  பள்ளிகளுக்கு  புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசு பள்ளி கட்டடங்கள் நூலக கட்டிடம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி  வாயிலாக திறந்து  வைத்தார்.

அதை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை முதலமைச்சர் வழங்கினார். 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் அடையாளமாக 13 பணியாளர்களுக்கு ஊக்க தொகைக்கான காசோலையை முதலமைச்சர்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு  மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.