தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனைக்கான தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்,அந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனவே இந்தப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடித்தத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.