தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம் - அண்ணாமலை விமர்சனம்!

Tamil Selvi Selvakumar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயமாக இருப்பதாக மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், திமுக ஆட்சியை கலைப்பதற்காகவே வடமாநிலத்தவர் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது என்ற முதலமைச்சரின் கருத்தை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சரியாக தூங்காததால் முதலமைச்சர்  இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக கூறினார். 

இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.வில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் மேனேஜர் அல்ல என்றும், கட்சித் தலைவன் போன்றுதான் முடிவெடுப்பேன் என்றும் கூறினார். யாருடைய காலிலும் விழமாட்டேன் என்ற அண்ணாமலை, தன்னுடைய முடிவால் வெளியேறுபவர்களை பற்றி கவலை படமாட்டேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.