தமிழ்நாடு

அரசு துறை சார்ந்த திட்டங்களுக்கான...அரசு மானிய காசோலையை வழங்கினார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கான அரசு மானிய காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசு மானிய காசோலையை வழங்கிய முதலமைச்சர் :

சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக 3 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தமிழக அரசு இதழில் சார்பில் தயாரிக்கப்பட்ட  “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் -ஐ முதலமைச்சர் வெளியிட்டார்.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பிரதிநிதிகள் தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய்க்கான நிதியினை வழங்கினார்.