தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு...!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் ஜூன் 5ம் தேதி நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசுத் தலைவர் சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு திரும்புவதற்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் சென்றார்.  அங்கு டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்கு விஐபி அறையில் காத்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.  மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பில் இருவரும் பரஸ்பரமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு குறித்த புகைப்படங்களை மத்திய நிதியமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.