அனைவருக்கும் பொதுவான குடியரசு முன்னாள் தலைவரை, ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவுக்கு தலைமையாக நியமிப்பது, அந்த பதவியை கொச்சைப்படுத்தும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னையில் திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, இந்தியா கூட்டணி என்றாலே பாஜக-வுக்கு அச்சம் வந்துவிடுவதாகவும், பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அனைவருக்கும் பொதுவான குடியரசு முன்னாள் தலைவரை, ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவுக்கு தலைமையாக நியமிப்பது, அந்த பதவியை கொச்சைப்படுத்தும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மேலும், பலிகடா ஆகப்போகிறோம் என தெரியாமல் ஒரே நாடு ஒரே தேர்தலை கொள்கையை அதிமுக ஆதரிப்பதாகவும், தலையாட்டி பொம்மைளாக இருப்பவர்களை குழுவில் போட்டு பாஜக சதித்திட்டம் தீட்டுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க || மீன் வலையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி!!