சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் மற்றும் புத்தாடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், பொற்கிழி வழங்கக் கூடிய நிகழ்ச்சி என்பது நீங்கள் செய்த பணிகளுக்கான பரிகாரம் என்று எண்ணிவிடக் கூடாது, நீங்கள் செய்யும் பணிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் திமுகவின் வேர், தமிழகத்தின் வேர் என கூறினார்.