தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - திருமாவளவன் ட்வீட்

Malaimurasu Seithigal TV

முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம் :

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிறந்தநாள் மார்ச் -1 தேதி தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சென்னை நந்தனம் மைதானத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துக்கொண்டு  விழாவினை சிறப்பு செய்தனர்.

தொல். திருமாவளவன் ட்வீட்

மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அகிலஇந்திய பார்வையுடன் அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான  பரப்புரையைத் தனது பிறந்தநாளிலிருந்தே தொடங்கிவிட்டார் பாஜக எதிர்ப்புசக்திகள் யாவும் ஓரணியில் திரள வேண்டுமென ஒங்கி ஒலித்திருக்கிறார். நாட்டைக் காக்கும் நோக்கில் அவர் முன்னெடுக்கும் முயற்சி வெற்றிபெற நாடுதழுவிய பயணம் மேற்கொள்ள வேண்டும்.
@TelanganaCMO @MamataOfficial @ArvindKejriwal போன்ற தலைவர்களைச் சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைக்குமாறு  வலியுறுத்துகிறோம்

அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி: 

முதல்வரின் பிறந்தநாள் பரிசாக  ஈரோடு_கிழக்குத் தொகுதி வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான அங்கீகாரமாகவும் அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை உணர்த்துவதாகவும் இவ்வெற்றி அமைந்துள்ளது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்