ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : 2 நிமிடங்களிலேயே முடங்கிய மக்களவை...பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மீனவர் சங்க மாநில மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.