சென்னையில் நடைபெற்ற வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதில் ஒரு பகுதியாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை முதற்கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ பணிகள் நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஆலந்தூரில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக ஓமந்தூரார் மருத்துவமனை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், மெட்ரோ ரயிலில் பயணித்து நந்தனம் ரயில் நிலையம் சென்றடைந்தார். இதனை தொடர்ந்து நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதையடுத்து கிண்டி கத்திப்பாரா சென்று ஆய்வுகளை தொடர்ந்தார். சென்னையில் மிக உயரமான மெட்ரோ பணி என்று அழைக்கப்படும் 114 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பணிகளை தமிழக முதல்வர் லிப்டில் மேலே சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார். மேலும் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ பணிகள் முடிவற்ற நிலையில் அதனையும் நேரில் சென்று ஆய்வு கொண்டார்.
கிண்டியில் முதலமைச்சர் விஜயை காண ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். அவரைக் கண்டதும் கைகளை அசைத்தும், முழக்கமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, பொதுமக்களுடன் சக பயணியாக பயணம் செய்த அவர் பயணிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் பயணித்த பொதுமக்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பெண் பயணிகளுடன் கலந்துரையாடி மெட்ரோ பயணம் மேற்கொண்டார். அதில் ஒரு பெண் பயணி அவரின் கைகளை பிடித்து நெகிழ்ந்து பேசிய புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆகிவருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.