தமிழ்நாடு

முதலமைச்சரின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா - ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்.

Malaimurasu Seithigal TV

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென நாளை ராகுல் காந்தி சென்னை வருகிறார். முன்னதாக அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து  புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், முதல்வரிடம் விடைபெற்றுக்கொண்டு அன்று இரவே டெல்லி திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.