தமிழ்நாடு

முதலமைச்சர் இரண்டு நாள் திருவண்ணாமலை பயணம்!

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். 

Malaimurasu Seithigal TV

சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்து கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத்தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், திருவண்ணாமலைக்கு செல்லும் முதலமைச்சர், மாலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியர்களுக்கு ஆடைகளை வழங்குகிறார். 

இதைத்தொடர்ந்து, அண்ணா நுழைவுவாயில் திறப்பு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரியை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.