தமிழ்நாடு

“முதல்வர் அண்ணா..இன்று சொன்னதே செஞ்சுடீங்க நா” - அடுத்தடுத்து குவியும் பாராட்டுக்கள்.. விஜய்யின் வெற்றியை வரவேற்கும் திரையுலகம்!

பாக்க தானே போறீங்க "விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”.. -எவராலும் விஜய் ஆக முடியாது!

Mahalakshmi Somasundaram

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி. ஆருக்கு பிறகு ஒரு கட்சி தொடங்கப்பட்ட உடன் இவ்வளவு ஆதரவை பெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும். வாக்கு பதிவுக்கு பிறகு வந்த பல கருத்து கணிப்புகளில் விஜய் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெறுவார் என கூறியிருந்தனர். மேலும் சில கருத்து கணிப்புகள் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில், இதனை அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தமிழக வெற்றி கழகம் தனி பெருபான்மையுடன் முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்க்கு திரை பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிபி சத்யராஜ்

விஜயின் தீவிர ரசிகராக அறியப்படுபவர் நடிகர் சிபி சத்யராஜ் இவரது தந்தை மற்றும் தங்கை திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில் சிபி மட்டும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு அளித்து வந்தார். இந்நிலையில் தவெக முன்னிலை வகிப்பதால் தனது சமூக வளைத்த பக்கத்தில் "கூட்டம் ஒட்டா மாறாது"-மாறிடுச்சு! "ஒட்டு சீட்டா மாறாது " -மாறிடுச்சு! “நடிகன் நாடாள முடியாது" -ஆளப்போகிறார் "அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் -வாய்ப்பில்லை ராஜா "அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?" -பாக்க தானே போறீங்க "விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”.. -எவராலும் விஜய் ஆக முடியாது!’ என பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்கியராஜ்

மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் விஜயுடன் நடித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் மகனான நடிகர் சாந்தனு தனது வளைத்த பக்கத்தில் “முதல்வர் அண்ணா… "பாத்துகலாம்" என்று சொன்னீர்கள்.... இன்று சொன்னதே செஞ்சுடீங்க நா.. வரலாற்று தருணம்.. நெவர் பிஃபோர் நெவர் ஆஃப்டர உங்களுடன் எப்போதும் துணை நிற்பேன்” என பதிவிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் “தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.  மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் 

விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா இவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தி “மதிப்பிற்குரிய விஜய் சார் தங்களுக்காகக் குரல் கொடுக்கவும், வாக்களிக்கவும் இவ்வளவு வலுவாகத் திரண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். தமிழக மக்கள் அனைவருக்கும் மற்றும் புதிய முதலமைச்சருக்கும் அனைத்து வளங்களும் கூட்டு வளர்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். தமிழ் அரசியலின் இந்தப் புதிய கட்டத்தையும் முகத்தையும் காண ஆவலாக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு

தெலுங்கில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் “புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்ற @actorvijay அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!! மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்றைய நாள் பெருமளவில் பிரதிபலிக்கிறது… இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

KVN தயாரிப்பு நிறுவனம்

விஜயின் கடைசி படம் என சொல்லப்படும் ஜனநாயகன் படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் “அனைத்து தடைகளையும் மீறி இன்று சரித்திரம் படைத்த நமது ‘ஜன நாயகன்’ தளபதி விஜய் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மையிலேயே ஒரு புரட்சி, மேலும் இது வரும் தலைமுறைகளுக்கும் எதிரொலிக்கும்.” என பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் “போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அருண் விஜய்

தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வரும் நிலையில் நடிகர் அருண் விஜய் “மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் ...தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இது மக்களின் வெற்றி!” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் “ஒரு விரல் புரட்சி.. விசில் போடு..!!! மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள்.. பல தசாப்தங்களாகப் பலர் முயற்சி செய்தார்கள்.. ஆனால், மக்கள் விரும்பினால் அதிகாரம் அவர்களுடையது என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.. நம் தமிழர்களின் மாற்றத்தையும் செழிப்பையும் எதிர்நோக்குகிறோம்.. வாழ்த்துகள்” என பதிவிட்டு வலுத்து தெரிவித்துள்ளார்.

நானி

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நானி தனது சமூக வலைத்தளத்தில் “வாழ்த்துகள்@actorvijay சார். முதலில் சந்தேகிக்கப்பட்டு, பின்னர் முடிசூட்டப்பட்டார். எங்கள் வீட்டில் நடந்தது, இப்போது எங்கள் பக்கத்து வீட்டில் நடக்கிறது. தங்கள் முடிவைத் தெளிவுபடுத்தியுள்ள தமிழக மக்களுக்கு இனிமேலும் சிறந்த விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன்.” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி

நடிகர் சூரி “விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். @actorvijay மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விஷால்

நடிகரும் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் பொருளாளருமான “தனது முதல் தேர்தலில் #விஜய்க்கு என்னவொரு பிரமிக்க வைக்கும் அறிமுகம். தளபதி, உங்களுக்குப் பாராட்டுகள். இந்தத் தருணத்தின் நாயகனுக்கு வாழ்த்துகள். #தமிழ்நாடு முழுவதும் #எம்.ஜி.ஆரய்யாவின் கதை மீண்டும் நிகழ வேண்டும். மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும்போது, ​​அதை யாராலும் தடுக்க முடியாது. தற்போதைய அரசியல் சூழலுக்கு எதிரான ஒரு முழுமையான சீற்றம் என்று இதைத்தான் நாம் கூறுவோம். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள். மாநிலத்திலும், நமது நலிவடைந்த திரையுலகிலும் வளர்ச்சி ஏற்படும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு தந்து வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகரான “உங்கள் முதல் தேர்தலில் நீங்கள் பெற்ற இந்த மிகச்சிறந்த மற்றும் தகுதியான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் அசைக்க முடியாத பேரார்வத்துடனும் நோக்கத்துடனும் தொடர்ந்து ஊக்கமளித்து, வழிநடத்தி, சேவை செய்ய வாழ்த்துகிறேன். தமிழ்நாடு மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் நீங்கள் ஆற்றும் பொதுச் சேவைக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.