தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளும் கருணை மதிப்பெண்ணும்!!

Malaimurasu Seithigal TV

ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 அன்று முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வில் 4,5,6 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 2 மதிப்பெண் கொண்ட 28  ஆம் வினாவுக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், வினா எண் 4,5,6 synonyms, Antonyms குழப்பத்தாலும் இரண்டு மதிப்பெண் கொண்ட 28-ஆம் கேள்வி தவறாக கேட்கப்பட்டதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனருக்கு மாணவர்கள்,  மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தது.

தற்போது அந்த கோரிக்கையை ஏற்று அந்த வினாக்களுக்கு எந்த விடையளித்திருந்தாலும் விடை அளிக்காவிட்டாலும் மதிப்பெண் வழங்க, தேர்வு துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.