தமிழ்நாடு

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு: முக்கிய அறிவிப்பு

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில்  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Malaimurasu Seithigal TV

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில்  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் கொரோனா அலையில் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து, மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 10, 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே 12-ஆம் வகுப்பு மாணவர்களின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரிய நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.