தமிழ்நாடு

ஏரியில் மூழ்கிய மாணவன்...தோல்வியில் முடிந்த நண்பர்களின் முயற்சி!

Tamil Selvi Selvakumar

செம்பரம்பாக்கம் ஏரியில் 12-ஆம் வகுப்பு மாணவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததன் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவன், கோவூர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றவர் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

அப்போது, ஏரியின் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஜெகதீசனை நீச்சல் அடிக்க வருமாறு அவரது நண்பர் சூர்யா அழைத்ததை அடுத்து நீரில் இறங்கிய ஜெகதீசன், நீச்சல் தெரியாததாலும், அதிகப்படியாக தண்ணீர் குடித்ததாலும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். சக நண்பர்களின் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஜெகதீசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.