தமிழ்நாடு

அரியலூரில்  துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்...! 

Malaimurasu Seithigal TV

அரியலூர் பேருந்து நிலையத்தில் , அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிகழ்வை திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில் ஒலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்களை ஆள் குறைப்பு என கூறி வீட்டிற்க்கு அனுப்பும் அரசானை 10 ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஆட்சியர் உத்திரவு படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அரியலூர் நகராட்சியில்  31 மாத தினகூலி அரியர்ஸ் ஒரு நபருக்கு 14 ஆயிரத்து 490யும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 61 மாத தினகூலி அரியர்ஸ் ஒரு நபருக்கு 40 ஆயிரத்து 650 ஐ வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். 

தொடர்ந்து, அரசு உத்திரவின் படி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வீட்டுமணை வழங்கி குடியிருப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.