சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் அருகே இரண்டு வயது மூன்று வயது சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பொறியியல் கல்லூரி மாணவன் கதிர்வேல் (22)என்பவரை சங்ககிரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவத்தால் பரபரப்பு..
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் பேருந்து நிலையம் அருகே வசிக்கும் கதிர்வேல் (22) என்ற இளைஞர் ஈரோடு அரசு கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படிப்பு பயன்று வருகிறார்.
இவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள மூன்று வயது மற்றும் இரண்டு வயது பெண் குழந்தைகளுக்கு பிறப்பு உறுப்பில் காயம் இருந்ததாகவும் குழந்தைகளின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, மருத்துவர்கள் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிவித்ததின் பேரில் அந்த குழந்தைகளின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கல்லூரி மாணவன் கதிர்வேலுவை கைது செய்த மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் அந்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...