திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், பகல் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான பைன் மரக்காடுகள் , குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களும் நாளை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .