தமிழ்நாடு

மதுரையில் முதலமைச்சர்.. தொண்டர்கள் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..!

முதலமைச்சர் கலந்துகொண்டநிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு

Malaimurasu Seithigal TV

மதுரையில் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். பின்பு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ள புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

சிலையின் விவரம்

அம்பேத்கர் சிலையை பொருத்தவரையில் முழுக்க முழுக்க வெண்கல சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. 28 அடி உயரம் கொண்டுள்ள இந்த சிலை 40 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிலைக்கு கீழ் உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருமா பங்கேற்பு

இந்நிகழ்ச்சியின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்பு அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். ஏராளமான திமுக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மு.க ஸ்டாலின் அவர்களை சாலை நெடுகிலும் வரவேற்றனர்.

உற்சாக வரவேற்பு

மதுரை மாநகரில் சிறிய சாரல் மழை இருந்த பொழுதிலும், அதை பொறுப்படுத்தாமல் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. மேலும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.