மகளிர் உரிமைத்தொகை  மகளிர் உரிமைத்தொகை
தமிழ்நாடு

"முதல்வரிடமிருந்து வந்த நற்செய்தி" - வரவு வைக்கப்பட்டது 'மகளிர் உரிமைத்தொகை!' அடுத்தடுத்து திட்டங்கள் தொடருமா?

முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000-யை வரவு வைத்துள்ளார்.

Vinvizhi Leninton

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்த முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000-யை வரவு வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின், முந்தைய ஆட்சியில் மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை எந்த இடையூறும் இன்றி மக்களுக்கு தொடர்ந்து வழங்கிட கூறினார். மேலும், இது போன்ற திட்டங்கள் தொடருமா? இந்த மாதமும் அவர்களின் வங்கி கணக்குகளில் பணத்தை வரவு வைப்பார்களா? என்ற கேள்விகளாலும் முதல்வரை துளைத்தார். இதனையடுத்து, கடந்த ஆட்சியில் இருந்த புதுமை பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேற்று காலை ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பை பெற்றது.

அதன் பின்பு, மகளிர் உரிமை தொகையும் வரவு வைக்கப்படும் என்று கூறிய சிறிது நேரத்திலேயே அது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும் என்றுதானே கூறினீர்கள்?. மாதம் ரூ. 2,500 சொல்லிவிட்டு ஆயிரம் ருபாய் கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?. மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 15ம் தேதிக்குள் வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடர இப்போ எதுக்கு அவகாசம்?. என்ன மறுசீரமைப்பு பண்ணபோறீங்க? என்று தனது கண்டனத்தை முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்வைத்தார். இதனையடுத்து, இன்று காலை மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது.

மேலும், கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் திட்டங்கள் எந்த தடையும் இன்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மகளிர்க்கு மாதம் தோறும் ரூ. 2500 தருவதாக கூறிய நிலையில் தற்போது ரூ. 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மாதம் தோறும் தொடரும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் அடுத்தடுத்து தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் மக்களால் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்