தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

Malaimurasu Seithigal TV

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 6 தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று 50 ஆயிரம் இடங்களில் 7ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசம்பொன்னுக்கு சென்றுவிட்டு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், வரும் வழியில் விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகாமில் பங்கேற்ற பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.