Vijay Assembly speech Vijay Assembly speech
தமிழ்நாடு

'OVER'.. ஸ்டாலின் பாணியில் சைகை காட்டிய முதல்வர்! கரகோசத்துடன் ரசித்த அவை உறுப்பினர்கள்.. நிறைவடைந்த சட்டப்பேரவை

தனது உரை முடிந்ததும் Over என்பது போல் சைகை செய்தார் முதல்வர்.

Vinvizhi Leninton

17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். மேலும், எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டு முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் திமுகவினர் கூறிய 'சோபா மாடல்' ஆட்சி என்ற விமர்சனத்தை குறித்தும் அவரை பேசினார். ஊழல் செய்பர்களையும், சித்தவர்களையும் விடப்போவதில்லை என்றுமாம் ஆவேசமாக முதல்வர் விஜய் அவையில் பேசினார். மேலும், பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது குறித்தும், பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது குறித்தும் முதல்வர் விஜய் பேசினார்.

மேலும், 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். மரபு மீறியதாகவும் இதற்கு முன்பு சட்டப்பேரவையில் நடந்தது இல்லை என்று திமுகவினர் பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய்,"அந்த மாநில உரிமை போராளிகளை, அந்த மரபு காக்கிற உரிமை போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். 2021 ஆகஸ்ட் 2 நியாபகம் இருக்கிறதா?. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் புகைப்படத்தை திறந்து வைக்கும் விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று கூறியது நினைவிருக்கிறதா?. விழா முடியும் போது கூட தேசிய கீதம் இரண்டாவது முறையாக மீண்டும் பாடப்பட்டது" என்று கூறினார். அதற்கு சபாநாயகர் அது இதே அவையில் நடந்ததாகவும் அது அவைகுறிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் இல்லாத அவையில் இவ்வாறு செய்யாலாமா? என்று சபாநாயகரிடம் அனுமதி வாங்கி, தனது உரை முடிந்ததும் Over என்பது போல் சைகை செய்தார் முதல்வர். இதனை எதிர்பார்க்காத அவையில் இருந்த உறுப்பினர்கள் பலத்த கரவோசத்துடன் முகத்தில் புன்னைகையுடன் ரசித்தனர். இதோடு இன்று சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதுடன் நிறைவடைந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.