Sofa Model controversy Sofa Model controversy
தமிழ்நாடு

"இது புரியவே ரொம்ப நாள் ஆயிருச்சு.." பர்னிச்சர் பிசினஸை வெளியில் போய் செய்யச் சொல்லுங்கள்! 'சோபா மாடல்' குறித்த விமர்சனத்திற்கு முதல்வர் பதிலடி

அந்த பிசினஸ்தான் செய்யவேண்டும் என்றால், வெளியே போய் செய்யச் சொல்லுங்கள், ஆனால் சட்டசபைக்குள்ளே வேண்டாம்.

Vinvizhi Leninton

17வது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இன்று அவையில் முதல்வர் விஜய் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். ஆளுநர் உரை மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விரிவாக பதிலளித்தார். இதில் எதிர்கட்சிகள் தவெக ஆட்சியை 'சோபா மாடல்' ஆட்சி என்று விமர்சித்ததற்கு முதல்வர் விஜய் பதிலளித்துள்ளார்.

'சோபா மாடல்' ஆட்சி என்று புது ஆயுதத்தை எதிர்க்கட்சியினர் எடுத்துள்ளதாகவும் அது என்னவென்று புரிவதற்கே தனக்கு வெகுநாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார். மேலும் பேசிய முதல்வர் விஜய், " இந்த சோபா செட், டேபிள், ஷேர், டீபாய் இதுபோன்ற பர்னிச்சர் பிசினஸை வேறு எங்காவது வெளியில் போய் செய்யச் சொல்லுங்கள்; அந்த பிசினஸ்தான் செய்யவேண்டும் என்றால், வெளியே போய் செய்யச் சொல்லுங்கள், ஆனால் சட்டசபைக்குள்ளே வேண்டாம். ஆக்கபூர்வமாக கருத்துக்கள் இருந்த கூறுங்கள் கண்டிப்பாக சரியாக இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று பேசினார்.

அதனை தொடர்ந்த முதல்வர் விஜய் கூறும், 'ஒரு குட்டி கதை' ஒன்றினை கூறினார். அதில் "எங்கே அப்பாவை காணோம்" என்று நக்கலாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சாடி முதல்வர் ஜோசேப் விஜய் பேசினார். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் முதல்வர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், 'பார்ட்டி ஃபண்ட்' என்ற வார்த்தையால் கடும் கோபம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாமல் முதல்வர் பேசுவதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், ஊழல் செய்பவர்களையும், ஊழல் செய்தவர்களையும் விட போவதில்லை என்றும் பேசினார். மேலும், சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைவதால் தனது உரையை முடித்த முதல்வர் விஜய் ஸ்டாலின் ஸ்டைலில் 'Over' என்று சைகை காட்டினார். இது எதிர்க்கட்சியினர் இருக்கும்போது செய்ய நினைத்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.