தமிழ்நாடு

"நூலகத்திற்கு சென்று வரலாற்றை படியுங்கள்".. MLA புத்தாக்க பயிற்சி நிகழ்வில் சபாநாயகர் அறிவுரை! 'முதல்வர் செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம்தான்' என புகழாரம்

நான் பேசாமல், அமைதி புரட்சியை செய்வேன், அந்த புரட்சி மக்களுக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்

Vinvizhi Leninton

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி இன்று அழிக்கப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அவ்விடத்திற்கு வருகை புரிந்தார். மேலும், சட்டமன்ற நடைமுறைகள், விதிமுறைகள், கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் ஆகியவற்றை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிகழ்விற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முகமது பர்வேஸ், நிர்மல் குமார், வெங்கடராமணன், விக்னேஷ் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு சட்டம், சட்டமன்ற விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்த கையேடுகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மக்களின் பிரச்சனைகளை சிறப்பாக முன்வைக்க இந்த பயிற்சி உதவவும் எனவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 17வது சட்டமன்ற பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிலையில் முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரன், தமிழக மக்களுக்கு மாற்றம் பிறந்திருக்கிறது என்றும், செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம்தான் என்பதை தேர்தல் காலத்தில் நிரூபித்துக்காட்டினார் தமிழக முதல்வர் என்று சபாநாயகர் பேசினார்.

எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. நான் பேசாமல், அமைதி புரட்சியை செய்வேன், அந்த புரட்சி மக்களுக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும் நிரூபித்து முதல்வர் விஜய் காட்டியதாக பேசினார். ஏற்கனவே இருந்தவர்களுக்கு, புதிதாக வந்திருப்பவர்களுக்கும் இந்த மற்றம் தேவை என்பதால் இதை முன்னெடுப்பதாக சபாநாயகர் பேசினார். மேலும், புதிய கோணத்தில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை தயங்காமல் சொல்லுங்கள் என்று புதிதாக MLA-வாக பதவியேற்றுள்ளவர்களுக்கு சபாநாயகர் அழைப்புவிடுத்தார்.

"நாட்டுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கிள்ளி கொடுங்கள் என்று கேட்டால் அள்ளிக்கொடுத்துள்ளார்கள். அதற்கான மதிப்பு என்னவென்றால், நீங்கள் எங்களுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்? என்பது பற்றி நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது" மேலும் பேசிய அவர், இந்த அவையில் ஒழிக்கும் குரல்தான் இந்த அரசிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் இடமாக இருக்கும் என்று பேசினார். மேலும், எதை சொல்லவேண்டும்.. எதை பேச கூடாது என்பது குறித்து விளக்க பல வல்லுநர்கள் வந்திருப்பதாகவும் அவர் பேசினார். மேலும், சபையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் இருக்கிறார்கள், சிரமம் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் அதை எல்லாம் தெரிந்துகொள்ள நூலகம் சென்று படிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பழைய வரலாற்றை புரட்டி பார்க்கவேண்டும் என்றும் நூலகத்திற்கு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் பேசினார். அண்ணா, காமராசர், கக்கன், கம்யூனிச தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள நூலகம் செல்லவேண்டும் என்று கூறினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது மக்களுக்கு இருந்து அபிப்ராயம் மாற முக்கியகாரணமாக இருந்து சட்டமன்ற நிகழ்வுகள்தான் என்றும் அவர் பேசினார். முதல்வர் கையில் நாம் பத்திரமாக இருக்கிறோம். மக்களை காக்கும் பொறுப்பிலே அவரும் இருக்கிறார் என்று பேசி அவையில் இருந்த அனைவரையும் வரவேற்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.