முதன்முறையாக CM விஜய் செய்த செயல்.. செய்தியாளர் கேள்விக்கு சொன்ன ஒரு வார்த்தை! பெரியார் மண்ணில் 'சூப்பர்' பதில் CMOTamilnadu
தமிழ்நாடு

முதன்முறையாக CM விஜய் செய்த செயல்.. செய்தியாளர் கேள்விக்கு சொன்ன ஒரு வார்த்தை! பெரியார் மண்ணில் 'சூப்பர்' பதில்

செய்தியாளர்கள் அடுத்த கேள்வி எழுப்பும் முன்னர் பாதுகாவலர் குறுக்கே வந்து, முதலமைச்சரையும் செய்தியாளர்களையும் விளக்கினார்.

Antony Ajay R

நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் முதலமைச்சர் விஜய்.

நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியேறுகையில் செய்தியாளர் ஒருவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்தார்.

விஜய் கட்சி தொடங்கியபிறகு ஒரே ஒருமுறை மட்டும் விமான நிலையத்தில் இதேப்போல செய்தியாளர்களிடம் பேசினார். மே மாதம் 2025ம் ஆண்டு நடந்த அந்த சந்திப்பில், பிரசாரத்தைப் பார்க்க வரும் தொண்டர்கள் ஆபத்தான முறையில் உயரமான இடங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த முறை செய்தியாளர் அவரிடம், "பெரியாரின் மாவட்டத்துக்கு வந்திருப்பது எப்படி இருக்கிறது" எனக் கேட்க, "சூப்பரா இருக்கு" என்று மட்டும் பதிலளித்துவிட்டு திரும்பினார் விஜய்.

செய்தியாளர்கள் அடுத்த கேள்வி எழுப்பும் முன்னர் பாதுகாவலர் குறுக்கே வந்து, முதலமைச்சரையும் செய்தியாளர்களையும் விளக்கினார்.

முதலமைச்சராக பதவி ஏற்று கிட்டத்தட்ட 7 மாதங்கள் நிறைவடையப்போகிறது. இனியாவது அவர் முழுமையான செய்தியாளர் சந்திப்பை நடத்துவாரா எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.