தமிழ்நாடு

வட்டியில்லா கடன் வழங்க அரசு முன்வருமா? பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன்...!

Tamil Selvi Selvakumar

பொதுமக்களின் பங்களிப்பு மூலமாக தான் கூட்டுறவு கடன் சங்கங்கள் நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது, சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது என்றும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு சங்கம் மூலமாக வாராந்திர வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், வட்டி இல்லாத கடன் என்பது சாத்திய கூறு இல்லாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், மக்களின் பங்களிப்பு மூலமாக தான் சங்கங்கள் நடைபெற்று வருவதாகவும், மக்களின் வைப்புத் தொகையில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.