தமிழ்நாடு

”பயிற்சியாளர்கள் மிக முக்கியம்....” உதயநிதி ஸ்டாலின்!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு அரசு கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளி மாணவியான ஜெர்லின் அனிகா மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப் போட்டியில்  சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றது.  இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது, பொருளாதாரம் படித்த ஜெர்லின் அனிகா, விளையாட்டிலும் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார் என கூறிய உதயநிதி ஸ்டாலின் வீரர் வீராங்கனைகளை தயார் செய்வதற்கு பயிற்சியாளர்கள் மிக முக்கியம் என  உதயநிதி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.