தமிழ்நாடு

கோவையில் கிராம உதவியாளர் காலில் விழ வைத்த நபர் மீது வழக்குப்பதிவு...

கோவையில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரத்தில், மனுதாரர் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை, கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர், தமது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்துள்ளார். மனு கொடுக்க சென்றவரின் காலில் கிராம உதவியாளர் முத்துசாமி விழும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
அது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் வீடியோ கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட வருவாய் அதிகாரி, காவல் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி,  கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
இதில் கோபால்சாமி காலில் விழச் சொன்னது உறுதியானது. இதனையடுத்து, கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரத்தில், கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.