தமிழ்நாடு

டான்ஸ் ஆடும்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு!!!

Malaimurasu Seithigal TV

திருமண நிகழ்ச்சியில் கச்சேரியில் டான்ஸ் ஆடும் போது திடீரென மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.

இசை கச்சேரியில் நண்பர்களுடன் இணைந்து நடனம் 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்ய சாய் ரெட்டி(21). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார். சத்யாவின் தோழியான பூனம் என்பவரின் சகோதரியின் திருமண நிகழ்ச்சி நேற்று மாலை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா அங்கு நடந்த இசை கச்சேரியில் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி வந்தார். 

உடல் பிரேத பரிசோதனை 

இந்நிலையில் திடீரென சத்யாவிற்கு   வலிப்பு ஏற்பட்டு காதில் ரத்தத்துடன்  மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக சத்யாவை மீட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சத்யா பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.எம்.பி.டி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குபதிவு

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சத்யா இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.