தமிழ்நாடு

டிவிட்டர் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது: காமெடி நடிகர் செந்தில்

தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.

Malaimurasu Seithigal TV

தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.

நகைச்சுவை நடிகா் செந்தில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் பி.தேன்மொழியை சந்தித்து புகார் அளித்தார். அதில்,  தமிழ் திரைப்படத்துறையில் 40 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 12-ஆம் தேதி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிலா் டிவிட்டரில் தனது பெயரில் போலி கணக்குத் தொடங்கியுள்ளனா்.

அதன் மூலம், தமிழக அரசு மீதும், தமிழக முதல்வா் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளனா். இந்த மோசடி வேளையில் ஈடுபட்ட நபா்களை காவல்துறையினா் கண்டறிந்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் அந்த போலி டிவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு தேன்மொழி உத்தரவிட்டாா். சைபா் குற்றப்பிரிவு, செந்தில் புகாா் குறித்து விசாரணை செய்கின்றனா்.