வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை 2192.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் காஸ் உள்ளிட்ட எரி பொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 2268 ரூபாயிலிருந்து 2192.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்படாமல் பழைய விலையே நீடிக்கிறது.