தமிழ்நாடு

தமிழ்நாடு அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்...!

Tamil Selvi Selvakumar

கோவையில் தமிழ்நாடு அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசு, உயர் கல்வித்துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், பாதிக்கப்பட்டவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 

அப்போது அவா்கள் கோாிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். இதில் மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.