தமிழ்நாடு

கணினி வழியில் வாடகை செலுத்தும் திட்டம் நவ.1ல் அமல்... இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவிப்பு...

திருக்கோயில்களுக்கு சொந்த இடங்களுக்கு கணினி வழியில் வாடகை செலுத்தும் திட்டமானது வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

Malaimurasu Seithigal TV

திருக்கோயில்களுக்கான வாடகை இணையம்  அல்லது கோயிலுக்கு சென்று கணினி வாயிலாகவோ, மாதத்தின் முதல் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி குறைவாக உள்ள கோவில்களுக்கு, நிதி வசதிமிக்க கோவில்கள் சார்பில், கணினி, பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்து, செலவினை பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள, கருத்துருவை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்கான உபகரணங்கள் தொடர்பான அறிக்கையை வரும் 25ம் தேதிக்குள் ஆணையர் அலுவலகத்திற்கு, இணை ஆணையர்கள் அனுப்ப வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.