தமிழ்நாடு

தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் தப்பிக்க முடியாது - அண்ணாமலை எச்சரிக்கை

Tamil Selvi Selvakumar

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 

சென்னையில் இருந்து  கோவை வந்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக-வினர் மீது தாக்குதல் நடைபெற்றது கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.

கோவை மாவட்ட பாஜக தலைவரை கைது செய்த காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த அவர்,  காவல்துறை நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் தப்பிக்க முடியாது எனவும்  உரிய ஆவணங்களை தொகுத்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். 

காவல்துறையை கண்டித்து நாளை கோவையில் பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெறும் என தெரிவித்த அண்ணாமலை, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை பொறுத்தவரை மத்திய அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல எனவும் அண்ணாமலை  தெரிவித்தார்.