pmk founder ramadoss 
தமிழ்நாடு

பாமக பூசல்; “2026 -க்கு பிறகு அன்புமணி எல்லாத்தையும் வாரிக்கொண்டு போகட்டும்” - நொந்து போய் பேசிய ராமதாஸ்..!

“செயல் தலைவர் அன்புமணியுடனான பிரச்சனை முழுவதும் உங்களுக்கு தெரியாது....

Saleth stephi graph

கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுக்கா பாமக -வில் பெரும் பதற்றத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

ஓயாத குழப்பம் 

அதுமட்டுமின்றி பொதுக்குழுவை கூட்டி அன்பு மணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நோக்கத்தில் கட்சியில் உள்ள அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.

அப்படி தந்தை வெளியேற்றும் நிர்வாகிகள் கட்சியில் நீடிப்பதாக அன்புமணி அறிக்கை அளிக்கிறார்.இதனால் நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது.. திமுக -வை கடுமையாக எதிர்த்த புதுமுக அரசியல்வாதி விஜய் அதிமுக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தபோது வரை அது உறுதியாகவில்லை. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  “செயல் தலைவர் அன்புமணியுடனான  பிரச்சனை முழுவதும் உங்களுக்கு தெரியாது. எங்களின் இந்த சமரச பேச்சு வார்த்தை டிராவில் முடிந்து விட்டது. இதற்கு முன்னால் 14 பஞ்சாயத்துகள் நடந்தது.  நான் தொடங்கிய 34 அமைப்பில் இருந்து வந்த 14 பஞ்சாயத்து காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது..”

தவெக -உடன் கூட்டணி 

இந்த நிலையில்,  தவெக -உடன் கூட்டணி வைக்கப்படுமா என நிருபர் கேள்வி எழுப்பினர், அதற்கு  "அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என ராமதாஸ்  விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர் “இருக்கும் வரை கட்சியின் தலைவராக நான் தான் இருப்பேன். “2026 -தேர்தலுக்கு பிறகு வேண்டுமானால் அன்புமணி எல்லவற்றையும் வாரிக்கொண்டு போகட்டும். அன்புமணி எல்லாமே தனக்குத்தான் வேண்டும் என்று யோசிக்கிறார்” என அவர் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.