தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் 28 தொகுதிகள் என கூட்டணி கையெழுத்தானது. தொடர்ந்து தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள்,இந்திய உணின் முஸ்லிம் கட்சி 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகள், மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 70 ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது. திமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் கட்டி வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ஏற்கனவே போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சில புதுமுகங்களுக்கம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் குளச்சல், அறந்தாங்கி மற்றும் விளவன்கோடு ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் :
கிள்ளியூர் - எஸ் ராஜேஷ் குமார்
குளச்சல் - தாரகை
விளவங்கோடு - பிரவீன்
ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
காரைக்குடி - எஸ். மாங்குடி
திருவாடானை - ராம கருமாணிக்கம்
நாங்குநேரி - ரூபி மனோகரன்
ஊத்தங்கரை - குப்புசாமி
பொன்னேரி - துரை சந்திரசேகர்
சோளிங்கர் - முனிரத்தினம்
கடலூர் - A.S சந்திரசேகரன்
மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் முஹம்மது
அறந்தாங்கி - ராமச்சந்திரன்
சிவகாசி - கணேஷன் அசோகன்
வேளச்சேரி - அசான் மௌலானா
துறையூர் - விச்சு லெனின் பிரசாந்த்
ஊட்டி - ராமசந்திரன்
கிருஷ்ணகிரி - செல்ல குமார்
ஆத்தூர் - S.k அர்த்தநாரி
ஸ்ரீபெரும்பதூர் - செல்வ பெருந்தகை
ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
சிங்காநல்லூர் - வி. ஸ்ரீநிதி நாயுடு
அம்பாசமுத்திரம் - V P துறை
உசிலம்பட்டி - சரவணா குமார்
சங்கரன்கோவில் - சங்கை கணேஷன்
பென்னாகரம் - தமிழ் குமரன்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.