தமிழ்நாடு

வெள்ளத்தில் காருடன் சிக்கிய காங்கிரஸ் பிரமுகர்.. பத்திரமாக மீட்ட கிராம மக்கள்....

பெங்களூரு நகர் ஆனேக்கள் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரை, கிராமமக்கள் டிராக்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

Malaimurasu Seithigal TV

பெங்களூரு நகரில் நேற்று மாலையில் கனமழையின் காரணமாக ஆனேக்கள் பகுதியில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆனேக்கள் பகுதியில் உள்ள கீழ் தரை பாலத்தில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

இதற்கிடையில் அந்த வழியாக காரில் வந்த காங்கிரஸ் பிரமுகர் ஹரீஸ் என்பவர்,அதன் ஆழம் தெரியாமல் பாலத்தை கடக்க முயற்சித்தார். அப்போது தண்ணீரில் வாகனம் சிக்கிக்கொள்ள வெளியே வர முடியாமல் தவித்த ஹரிஷ் காரின் மேலே ஏறி அமர்ந்துகொண்டு, அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு தொலைபேசி வாயிலாக தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதை தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள் சிலர் டிராக்டரை கொண்டு வந்து காங்கிரஸ் பிரமுகர் ஹரிஷ் மற்றும் அவரது வாகனத்தை மீட்டனர்.