தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனை அனுமதி!!

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Suaif Arsath

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திடீர் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், விசா மோசடி வழக்கு நடந்து வரும் சூழலில் அவரது மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.