சென்னை திருவொற்றியூரில் 450 ஆண்டுகள் பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், திருப்பதிக்கு இணையாக தங்கிச் செல்லும் அறைகள் கட்டப்பட்டு, அதன் வழியாக படிப்படியாக பக்தர்களை அனுமதிக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.