தமிழ்நாடு

”நேரத்திற்கேற்ப மின் கட்டண உயர்வு” மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்!

Tamil Selvi Selvakumar

மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் நுகர்வோர்களை பாதிக்காது எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகளில் நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படும் உள்பட சில திருத்தங்கள் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மாலை நேர உச்ச காலங்களில் 20 சதவீத மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தாது என அறிவித்துள்ளது.

மேலும் வீடுதோறும் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் எந்த அளவிற்கும் பாதிப்படையாது எனவும் தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.