தமிழ்நாடு

தொடரும் கனிம வளக்கடத்தல்...! நெல்லையில் 11 கனரக லாரிகள் பறிமுதல்..!

Malaimurasu Seithigal TV

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். 

அப்போது, அதிக அளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10-க்கும் மேற்பட் கனரக லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தமிழகத்திலிருந்து கனிம வளங்களை அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக லாரிகளில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது இதையடுத்து குமரி மற்றும் தென்காசி மாவட்ட சோதனை சாவடிகளில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து இன்று காலை ராதாபுரம் வருவாய் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 11 லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் 11 லாரிகளையும் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.